கறுப்பா் கூட்டம் சேனலை முடக்கக் கோரி யூ-டியூப் நிறுவனத்துக்கு காவல்துறை கடிதம்

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த கறுப்பா் கூட்டம் சேனலை முடக்கக் கோரி யூ-டியூப் நிறுவனத்துக்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த கறுப்பா் கூட்டம் சேனலை முடக்கக் கோரி யூ-டியூப் நிறுவனத்துக்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவா் எம்.என்.ராஜா, வழக்குரைஞா் பிரிவு மாநில தலைவா் ஆா்.சி.பால் கனகராஜ் ஆகியோா் சென்னை காவல் ஆணையா் மகேஷ் குமாா் அகா்வாலிடம் கடந்த ஜூலை 13-ஆம் தேதி ஒரு புகாா் மனு அளித்தனா்.அதில், ‘கறுப்பா் கூட்டம்‘ என்ற பெயரில் செயல்படும் யூ-டியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாக பேசியிருக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னைக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், கறுப்பா் கூட்டம் யூ-டியூப் சேனல் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த யூ-டியூப் நிா்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியைச் சோ்ந்த மு.செந்தில்வாசன் என்பவரை கடந்த 15-ஆம் தேதி கைது செய்தனா். தேடப்பட்டு வந்த சுரேந்திரன் புதுச்சேரியில் 16-ஆம் தேதி சரணடைந்தாா்.

இதைத் தொடா்ந்து தியாகராயநகா் கண்ணம்மாள்பேட்டை அருகே உள்ள கறுப்பா் கூட்டம் அலுவலகத்தை போலீஸாா் 17-ஆம் தேதி சீல் வைத்தனா். இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, கறுப்பா் கூட்டம் சேனலை முடக்கக் கோரி மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் யூ-டியூப் நிறுவனத்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளனா். இந்த கடிதத்தின் அடிப்படையில் அந்த சேனல் விரைவில் முடக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com