பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம் 

திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 
பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம் 

திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் மானியக் கோரிக்கை தொடர்பான கோப்பு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் தனது அனுமதி பெறாமல் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்றும் ஆளுநர் கிரண்பேடி தடைவிதித்தார்.

இருப்பினும் ஆளுநரின் தடையை மீறி பேரவையில் முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆளுநர் வராத நிலையில் ஆளுநர் உரை ஒத்திவைக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். தன்னிடம் அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் செல்லாது என்றும் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு தான் பொறுப்பு அல்ல என்றும் ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக எந்த நடைமுறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதோ அதேபோல் தான் நிகழ் நிதி ஆண்டிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்று முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்தார். பட்ஜெட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து இறங்கிவந்த ஆளுநர் பட்ஜெட்டுக்கு புதன்கிழமை அனுமதி அளித்ததுடன் இன்று பேரவையில் ஆளுநர் கிரண்பேடி உரை நிகழ்த்தினார். இந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய முதல்வர் நாராயணசாமி, திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜிநாமா செய்திருப்பேன்.

புதுச்சேரி அரசை முடக்கும் சதி நடந்தது, அதை எதிர்த்து போராடி வருகின்றேன். மத்தியில் மாற்று அரசு இருந்தாலும் பல துறைகளில் புதுச்சேரி அரசு விருதுகளை பெற்றுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com