புதுச்சேரியில் மரத்தடியில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டம்: அதிமுக தர்ணா

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டம் மரத்தடியில் தொடங்கியது.
மரத்தடியில் நடைபெற்ற புதுவை சட்டப்பேரவை
மரத்தடியில் நடைபெற்ற புதுவை சட்டப்பேரவை

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டம் மரத்தடியில் தொடங்கியது.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது. முதல்நாளில் முதல்வர் நாராயணசாமி ரூ.9,000 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில்  ஆளுநர் கிரண்பேடி உரையாற்றினார்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற, என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனால் இன்று சனிக்கிழமை நடைபெறும் சட்டபேரவை கூட்டத்தொடரை, சட்டமன்ற வளாகத்தில் உள்ள மரத்தடியில் நடத்தப்படும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, அங்கு பந்தல் அமைக்கப்பட்டு, இருக்கைகள் போடப்பட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டு சபாநாயகர் சிவக்கொழுந்து பேரவையை தொடங்கி வைத்தார். புதுவை சட்டப்பேரவை மரத்தடியில் இன்று பகல் 1.30 மணி அளவில் தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் எழுந்த அதிமுக பேரவை குழுத்தலைவர் ஆ.அன்பழகன், அரசு எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காததால் சட்டப்பேரவை உறுப்பினருக்கு கரோனா பரவி உள்ளது. அதனால் அரசை கண்டித்து தரையில் அமர்ந்து போராட்டம் செய்வதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் அதிமுக எம்எல்ஏக்கள் அசனா, பாஸ்கர் ஆகியோரும் சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய முதல்வர் வே.நாராயணசாமி, அனைத்து எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு திங்கட்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்படும் என்றார்.

மானியக் கோரிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பேசினர்.
இறுதியாக பட்ஜெட் நிறைவேறியது.பின்னர் பேரவையை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து காலவரையின்றி ஒத்திவைத்தார். என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் அவையில் பங்கேற்கவில்லை. பேரவைக்கூட்டம் பகல் 3.45 மணி அளவில் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com