
நாகதேவதை அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜைகள்
சேலம் மாவட்டம், சங்ககிரி சந்தைப்பேட்டை அருள்மிகு செல்லியம்மன் கோயில் வளாகத்திற்கு வெளிப்புறத்தில் உள்ள ஸ்ரீ நாக தேவதை அம்மனுக்கு நாகபஞ்சமி தினத்தினையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீ நாகதேவனை அம்மனுக்கு நாகபஞ்சமி விழாவினையொட்டி ராகு, கேது, ப்ரிதியாக ஹோமும் சுவாமிகளுக்கு பால் அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் ராகு , கேது காலசர்ப தோஷங்கள் உள்ளவர்கள் கோயில் அர்ச்சகர் மூலம் சிறப்பு அர்ச்சனை செய்தனர். அதனையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்றன.
வருடந்தோறும் இக்கோயிலில் நாகபஞ்சமி தினத்தில் அதிகமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சுவாமியை வழிப்பட்டுச் செல்வது வழக்கம். நிகழாண்டு கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி கோயில் பூசாரி மட்டுமே பூஜைகளை செய்தார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G