
கோப்புப்படம்
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,868 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,45,859 ஆக உயர்ந்துள்ளது.
இதில், அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,013 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 99,794 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று 4,868 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இன்று பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக, காஞ்சிபுரத்தில் 485 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 373 பேருக்கும், ராணிப்பேட்டையில் 359 பேருக்கும், விருதுநகரில் 357 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..