கேரளத்தில் பருவமழை தொடக்கம்: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ம் தேதி தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் பருவமழை தொடக்கம்: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


சென்னை: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ம் தேதி தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்..
ஈரோடு மாவட்டம் கொடுமடியில் 8 செ.மீ. மழையும், கன்னியாகுமரிமாவட்டம் குழித்துறையில் 4 செ.மீ. மழையும், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இது நாளை புயலாக வலுவடைந்து மேற்கு கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com