ராயபுரத்தில் 4,192 பேருக்கு கரோனா; ஆயிரத்தை நெருங்கும் திருவொற்றியூர்

சென்னை ராயபுரத்தில் 4,192 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தண்டையார்பேட்டையில் 3,192 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
ராயபுரத்தில் 4,192 பேருக்கு கரோனா; ஆயிரத்தை நெருங்கும் திருவொற்றியூர்


சென்னை: சென்னை ராயபுரத்தில் 4,192 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தண்டையார்பேட்டையில் 3,192 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி 24,545 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.  6 மண்டலங்களில் 17 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கரோனா பாதித்து 243 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) 1,234 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 24,545-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் 10 ஆயிரமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தற்போது 25 ஆயிரத்தை நெருங்க உள்ளது.

6 மண்டலங்களில் உச்சம்: ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 4,192 பேருக்கும், தண்டையாா்பேட்டையில் 3,192 பேருக்கும், தேனாம்பேட்டையில் 2,846 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 2,656 பேருக்கும், திருவிக நகரில் 2,351 பேருக்கும், அண்ணா நகரில் 2,178 பேருக்கும், அடையாறில் 1,411 பேருக்கும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த 6 மண்டலங்களில் மட்டும் சுமார் 17 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில்லாமல் வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களிலும் கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துவிட்டது. அம்பத்தூர் மற்றும் திருவொற்றியூர் மண்டலங்களில் முறையே 800 மற்றும் 900 என்ற அளவில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com