தமிழக சுகாதாரத் துறை செயலாளராக ஜெ. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளராக ஜெ. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பதவி வகித்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், வணிக வரித்துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை தமிழக அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டதை அடுத்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஏற்கனவே, ஜெ. ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com