
சென்னை: தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 5.92 லட்சம் வழக்குகள் பதியப்பட்டு, 6.38 லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்த விவரம்:
கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பொது முடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொது முடக்க உத்தரவை மீறுவோரை போலீஸார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழகம் முழுவதும் மார்ச் 24-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 5 லட்சத்து 92,614 வழக்குகளைப் பதிவு செய்து 6 லட்சத்து 38,484 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதை மீறி வந்தவர்களின் 4 லட்சத்து 71,666 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவர்களிடமிருந்து ரூ.12 கோடியே 61 லட்சத்து 84,099 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் பொது முடக்க உத்தரவை மீறியதாக ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை 1220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொது முடக்க உத்தரவை மீறி வந்தவர்களின் 19 இரு சக்கர வாகனங்கள்,14 ஆட்டோக்கள், 14 கார்கள் என மொத்தம் 47 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...