
சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.
ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்துக்கு உள்பட்ட சிவகளையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் மேலும் இரண்டு முதுமக்கள் தாழிகள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
சிவகளையில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தில் பழங்கால பாறை கிண்ணங்கள், இடைக்கற்கால கருவிகள், இரும்புக் கருவிகளின் கழிவுகள், முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்ட வகைகள், எடைக் கற்கள், செம்பினால் ஆன பொருள்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், தமிழக தொல்லியல் துறையினர் சிவகளையில் அகழாய்வுப் பணிகளை கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கினர். கடந்த 5-ஆம் தேதி 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 2 முதுமக்கள் தாழிகளும், உடைந்த நிலையில் 5 முதுமக்கள் தாழிகளும் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...