கம்பம் ஒன்றிய ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க உள்ளதாக கவுன்சில் கூட்டத்தில் தலைவர் பழனிமணி கணேசன் தெரிவித்தார்.
கம்பம் ஒன்றிய ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க உள்ளதாக கவுன்சில் கூட்டத்தில் தலைவர் பழனிமணி கணேசன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம் கூட்ட அரங்கில் தலைவர் பழனிமணி கணேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத்தலைவர் ஆர்.தங்கராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைவர் பேசியது,

கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு, 15 ஆவது நிதிக்குழு மானியம் ரூபாய் 37 லட்சத்து, 393 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 18 லட்சத்து, 50 ஆயிரத்து, 197 ரூபாய் வரையறுக்கப்பட்ட பணிகளுக்கும், 18 லட்சத்து 50 ஆயிரத்து 196  ரூபாய் வரையறை செய்யப்படாத பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அவர் கூறும் போது, 

ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்யும் குடிநீரை சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்க மதிப்பீடு தயார் செய்யப்பட உள்ளது என்றார். கூட்டத்தில் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.தமிழரசன், கா.ரேணுகாதேவி கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, ரா.சந்திரசேகரன் ஆகியோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com