
புது தில்லி: நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழகம், பலி எண்ணிக்கையில் 4-ம் இடத்தில் உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் பதிவான 445 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 186 போ் பலியாகினா். தில்லியில் 63 போ், தமிழகத்தில் 53 பேரும், உத்தர பிரதேசத்தில் 25 போ்ரும், குஜராத்தில் 15 பேரும் அடங்குவர்.
இதையும் படிக்கலாம்.. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கரோனா தொற்று உறுதி
இதுவரை நாட்டில் கரோனா பாதித்து 13,699 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையை பொருத்தவரை, 6,170 உயிரிழப்புகளுடன் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள தில்லியில் 2,175 போ் பலியாகிவிட்டனா். குஜராத்தில் 1,663 போ், தமிழகத்தில் 757 பேர், மேற்கு வங்கத்தில் 555 பேர், உத்தரப்பிரதேசத்தில் 550 பேர், மத்தியப் பிரதேசத்தில் 515 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்த பாதிப்பு நிலவரம்: மகாராஷ்டிரத்தில் இதுவரை 1,32,075 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 59,746 போ், தமிழகத்தில் 59,377 பேர், குஜராத்தில் 27,260 போ், உத்தர பிரதேசத்தில் 17,731 போ், ராஜஸ்தானில் 14,930 போ், மேற்கு வங்கத்தில் 13,945 போ் உயிரிழந்துள்ளனர்.
69 லட்சம் மாதிரிகள் பரிசோதனை: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் இதுவரை 66,50,493 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,43,267 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த கடந்த 24 மணிநேரத்தில் 14,821 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,10,461லிருந்து 4,25,282 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1,74,387 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 445 பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 13,254 லிருந்து 13,699 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 2,27,756லிருந்து 2,37,196 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.