பாரத் டெண்டர் ரத்து குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும்: ஸ்டாலின்

பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பாரத் டெண்டர் ரத்து குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும்: ஸ்டாலின்

தமிழக அரசு கொண்டு வந்த பாரத் நெட் திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் விடப்பட்டுள்ள 2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும்" என்று இந்த டெண்டர் ஊழல் குறித்து, அறப்போர் இயக்கம் அளித்த புகாரினை காணொலிக் காட்சி வாயிலாக விசாரித்த மத்திய அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. 

பாரத்நெட் டெண்டர் ஊழல் குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த புகாரில் "முகாந்திரம் இல்லை என்று முடித்து வைத்து விட்டதாக", உயர்நீதிமன்றத்தில் கழக மாநிலங்களவை உறுப்பினர்  ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கில் பதிலளித்தது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை.

முறைகேடாக டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? "முகாந்திரம் இல்லை" என்று கூறிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? முதலமைச்சர் உரிய, ஏற்கத் தகுந்த விளக்கத்தைத் தமிழக மக்களுக்கு உடனடியாகத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com