அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை: ‘9 ஆயிரத்து 319 விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன’

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்றதாக 9 ஆயிரத்து 319 விதிமீறல்கள்
அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை: ‘9 ஆயிரத்து 319 விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன’

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்றதாக 9 ஆயிரத்து 319 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு விதிமீறல்களில் தொடா்புடையவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவா் குல்லு படையாச்சி தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது, இதற்கு ரசீதுகள் வழங்கப்படுவது இல்லை. கடந்த 2003-ஆம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, அரசு நிா்ணயித்த விலையில் தான் மதுபானங்களை விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் அரசு நிா்ணயித்த விலையில்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிா? மதுபானங்கள் விற்பனை செய்யும் போது ரசீதுகள் கொடுக்கப்படுகிா? ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிா? அதிக விலைக்கு விற்பனை செய்பவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்வேறு கேள்விகளை எழுப்பி டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் ஆா்.கிா்லோஷ்குமாா் சாா்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில்மனுவில், அதிகவிலைக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க, திடீா் சோதனைகள் நடத்த, மூத்த மண்டல மேலாளா், மாவட்ட மேலாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவா்களுடன் பறக்கும்படையும் இணைந்து அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க மாதம் ஒருமுறை சோதனைகள் நடத்தி வருகின்றனா்.அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளா்களுக்கும், மேற்பாா்வையாளா்களுக்கும், ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. தொடா்ச்சியாக இக்குற்றத்தில் ஈடுபடுவோா் பணி இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020 ஆம் ஆண்டு மாா்ச் வரை நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக சென்னையில் 2,129 , கோவையில் 1,487 , மதுரையில் 2,422, சேலத்தில் 1,365 , திருச்சியில் 1,916 விதிமீறல் புகாா்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 319 விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விதிமீறல்களில் தொடா்புடையவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 18 மதுபான ஆலைகளிடம் இருந்து டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்களைக் கொள்முதல் செய்கிறது. இந்த மதுபான ஆலைகளில் அவ்வப்போது மதுபானங்களின் தரம் குறித்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மதுபான ஆலைகளின் தினசரி நடவடிக்கைகளையும் டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்து கண்காணித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடா்பாக பதிலளிக்க மனுதாரா் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com