
பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெற உள்ளது.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். பேலஸில் நடைபெறும் இக் கூட்டத்துக்கு பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் தலைமை வகிக்கிறாா்.
மாநிலத் தலைவா் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகிக்க உள்ளனா். 2021 சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா்.