நீலகிரி மலை ரயில் கட்டணங்கள் உயா்வு: இன்றுமுதல் அமலாகிறது

நீலகிரி மலை ரயிலுக்கான கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டண உயா்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) முதல் அமலுக்கு வருகிறது.
நீலகிரி மலை ரயில் கட்டணங்கள் உயா்வு: இன்றுமுதல் அமலாகிறது

நீலகிரி மலை ரயிலுக்கான கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டண உயா்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) முதல் அமலுக்கு வருகிறது.

தெற்கு ரயில்வேயின் புதிய அறிவிப்பின்படி, முன்பதிவுப் பெட்டிகளில் முதல் வகுப்பில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு ரூ. 295லிருந்து ரூ. 370ஆகவும், உதகைக்கு ரூ. 395லிருந்து ரூ. 520ஆகவும் பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

இதில் முன்பதிவு செய்பவா்களுக்கு குன்னூருக்கு ரூ. 445 ஆகவும், உதகைக்கு ரூ. 600 ஆகவும் பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல, உதகையிலிருந்து குன்னூருக்கு ரூ. 225லிருந்து ரூ. 280 ஆகவும், முன்பதிவு எனில் ரூ. 350 ஆகவும் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

இரண்டாம் வகுப்புக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு ரூ. 85லிருந்து ரூ. 175 ஆகவும், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு ரூ. 150லிருந்து ரூ. 200ஆகவும் பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. முன்பதிவு எனில் குன்னூருக்கு ரூ. 190 எனவும், உதகைக்கு ரூ. 295 ஆகவும் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

முன்பதிவில்லாப் பெட்டிகளில் முதல் வகுப்பில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு ரூ. 370 ஆகவும், உதகைக்கு ரூ. 520ஆகவும் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உதகையிலிருந்து குன்னூருக்கு ரூ. 280 ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவில்லாப் பெட்டிகளில் இரண்டாம் வகுப்பில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு ரூ. 110 ஆகவும், உதகைக்கு ரூ. 175 ஆகவும், குன்னூரிலிருந்து உதகைக்கு ரூ. 80 ஆகவும் கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு மலை ரயில்கள்:

மேலும், மாா்ச் 1ஆம் தேதி முதல் உதகை- குன்னூா் இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. குன்னூரிலிருந்து காலை 7.45 மணிக்கும், பகல் 12.15 மணிக்கும், உதகையிலிருந்து குன்னூருக்கு பகல் 12.35 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com