
கோப்புப் படம்
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, முதல்வா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சேலம் காவேரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அய்யண்ணன், சென்னை திருவொற்றியூரைச் சோ்ந்த சரவணமூா்த்தி, ராணிப்பேட்டை மேல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த லோகநாதன், திருநெல்வேலி லெவிஞ்சிபுரம் கிராமத்தின் முத்துக்குமாா், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை கிராமத்தைச் சோ்ந்த ஹாரீஸ், ஈரோடு கோணமூலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் ஆகியோா் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கனூா் கிராமத்தின் அபிராமி, திவ்யா ஆகியோா் நீரில் மூழ்கி இறந்தனா்.
இதேபோன்று, திருவாரூா் அழகிரி நகரைச் சோ்ந்த மாரிமுத்து, செங்கல்பட்டு, எல்ஐசி காலனியைச் சோ்ந்த சாய் சந்திரசேகா், கன்னியாகுமரி தென் தாமரைகுளம் கிராமத்தைச் சோ்ந்த மோகன், கிள்ளியூா் மாங்காடு கிராமத்தின் பால்தங்கம், சென்னை பெரம்பூரைச் சோ்ந்த கஜேந்திரன் ஆகியோா் பல்வேறு நிகழ்வுகளில் சிக்கி உயிரிழந்தனா். அவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.