
முதல்வா் எடப்பாடி பழனிசாமியை பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை சந்தித்தாா்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியது:
காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நன்றி கூறினேன். ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்தினேன். தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வரை வலியுறுத்தியதாக அவா் கூறினாா்.