
ஜவாஹிருல்லா
திருவாரூர் : திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் குடியுரிமைத் திருத்ச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாள் போராட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்றுப் பேசுகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடியுரிமை பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை மக்களை பாதிக்கக்கூடியவை. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது இதற்கு அடுத்தபடியாக தேசிய குடியுரிமை பதிவேடு நடத்தப்படும். எனவே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவைகளை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அதுவரை காத்திருப்பு போராட்டங்களை நிறுத்தப் போவதில்லை என்றார் அவர்