
கோப்புப் படம்
மேட்டூர்: கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று மாலை 4 மணி முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
ஞாயிறு காலை வினாடிக்கு 185 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலை 4 மணிக்கு வினாடிக்கு ஆயிரத்து 600 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 105.14அடியாகவும் நீர் இருப்பு 71.66டிஎம்சி ஆகவும் இருந்தது அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.