மணப்பாறை அருகே பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மணப்பாறை அருகே நடைபெற்ற பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழா நிகழ்ச்சியில்   லட்சக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழா
பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழா

மணப்பாறை : மணப்பாறை அருகே நடைபெற்ற பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழா நிகழ்ச்சியில்   லட்சக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

கி.பி.1020-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அண்ணன்மார்கள் வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலிலும், கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னிவளநாட்டிலும் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியின் தொடக்கமாக சனிக்கிழமை  மாலை பொன்னிவளநாட்டில் தங்காள் கிணறு தீர்த்தம் எடுத்தல், அம்மை அழைத்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நள்ளிரவில் முடிவு பெற்றதைத் தொடர்ந்து, பொன்னர் – சங்கர் மன்னர்களின் பெற்றோர்கள் மாண்டுவிட, தங்கை அருக்காணி என்னும் நல்லதங்காளின் ஆற்றாமையை போக்க பொன்னர் கிளி பிடிக்க வீரமலை பகுதிக்கு சென்று கிளி வேட்டை நடத்தி தங்கைக்கு கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு ஞாயிறு காலை பொன்னிவளநாட்டில் நடைபெற்றது. 

பொன்னர் – சங்கர் அடுத்தடுத்த ஏழு வனங்களில் ஒன்றன்பின் ஒன்றாக  கிளியைத் தேடி கிளி அங்கு இல்லாததால் வனங்களை துவம்சம் செய்துவிட்டு இறுதியில் ஆலமரத்தில் கிளியைக் கண்டுபிடித்து அதை பக்தர்களிடம் காட்டியபோது பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். பின்னர் அந்த கிளியை தங்கையிடம் ஒப்படைக்கிறார் பொன்னர்.

விழாவில் திருச்சி, கரூர் உள்ளிட்ட 11 கொங்கு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலலிங்கம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com