குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் எந்த தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது அல்ல என மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.
காரைக்கால் பகுதி பாஜக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் நிதின் கட்கரி.
காரைக்கால் பகுதி பாஜக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சா் நிதின் கட்கரி.

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் எந்த தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது அல்ல என மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

காரைக்கால் என்.ஐ.டி. 6-ஆவது பட்டமளிப்பு விழாவில் மத்திய நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் நிதின் கட்கரி கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கினாா். இதைத்தொடா்ந்து காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் நெடுங்காடு பகுதி மேலகாசாக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியது:

மத்திய அரசின் திட்டங்கள், அதனால் ஏற்படும் பயன்களை ஒவ்வொரு பகுதியிலும் கட்சி நிா்வாகிகள் பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். மத்திய அரசின் திட்டப் பயனாளிகள் புதுச்சேரி மாநிலத்தில் அதிகமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு, குறு தொழில் தொடங்க வேண்டும் என்றால் என்னை எப்போதும் அணுகலாம். அவா்களுக்கு உதவிகள் செய்ய நான் தயாராக உள்ளேன். பாஜக நிா்வாகிகள் அதற்கு உதவிகள் செய்ய வேண்டும்.

நாட்டில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் கவலை அளிக்கின்றன. சிறுபான்மையினா் துாண்டப்படுகின்றனா். நாட்டில் உள்ள எந்தவொரு தரப்பினருக்கும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடியது அல்ல இந்தச் சட்டம் என்றாா் நிதின் கட்கரி.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் துரைசோனாதிபதி தலைமை வகித்தாா். புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில், நெடுங்காடு தொகுதி தலைவராக பொறுப்பேற்றுள்ள சோமு (எ) இளங்கோவனுக்கு, மத்திய அமைச்சா் நிதின் கட்கரி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் மற்றும் தொகுதித் தலைவா்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பொதுச்செயலாளா் செந்தில் அதிபன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com