தஞ்சாவூர் மனோஜிபட்டியில் ஜல்லிக்கட்டு தொடக்கம்

தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டியில் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது.
தஞ்சாவூர் மனோஜிபட்டியில் ஜல்லிக்கட்டு தொடக்கம்

தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டியில் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை தொடங்கியது.

இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். களத்தில் விடுவதற்காக சுமார் 800 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது. 

காளைகளைப் பிடிப்பதற்காக 357 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாலை வரை நடைபெறவுள்ள இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com