
தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமையான இன்று திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.
திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த அவர், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.
ஆண்டாள் யானையிடம் ஆசி பெற்ற பின்பு மூலவர் நம்பெருமாளைத் தரிசித்துவிட்டு தாயார் சன்னதியில் தரிசனம் செய்தார். பின்னர், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...