
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழன் (மாா்ச் 12) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (மாா்ச் 13) வட வானிலை நிலவும். சென்னையைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 91.4 டிகிரி வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 77 டிகிரி வெப்பநிலையும் பதிவாக வாய்ப்புள்ளது.