
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை (மாா்ச் 12) கேள்வி நேரத்துக்குப் பிறகு பள்ளிக் கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு, உயா் கல்வி ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனா்.