
காவல் ஆணையர் சுமித் சரண்
கோவை: கோவையில் முன்னெரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் 40 இடங்களில் வாகனத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோவையில் கடந்த ஒரு வாரமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஆனந்த் என்பவர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெறுக்கத்தக்க வகையில் பேசிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரவு நேரங்களில் 40 இடங்களில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி கோவையில் முகாமிட்டுள்ளார். பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் பத்திகையாளர் சந்திப்பின் போது சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் உடனிருந்தார்.