
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார்.
அப்போது அரசியல் கட்சி தொடங்குவது குறித்து 3 திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறிய அவர், அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே தனது முடிவு என்று கூறினார்.
அவர் கூறிய 3 திட்டங்கள் என்னவெனில்,
1. தேர்தல் நேரத்தில் மட்டுமே பணியாளர்களுக்கு வேலை
தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளில் 50,000க்கும் மேல் கட்சிப் பதவிகள் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டுமே அது தேவை. மற்ற நேரங்களில் அது தேவையில்லை. தேர்தலில் வெற்றி பெற பிறகு அவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அது நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு.
எனவே, வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிப்பது போன்று, தேர்தல் பணி நேரத்தில் மட்டுமே பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படும்.
2. 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
கட்சி பதவிகளில் 60 முதல் 65% பணியிடங்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
3. ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை
தேசியக் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளில் ஆட்சிக்கும், கட்சிக்கும் அவர் தான் தலைவர். இதனால் கட்சியில் இருந்து யாரும் கேள்வி கேட்க முடியாது.
கொள்கைகள் தான் கட்சி. அதைவைத்து தான் கட்சி சொல்கிறது. கட்சியின் கொள்கைகளை ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்த வேண்டும்.
அனைத்துத் துறையிலும் அனுபவம் உள்ளவர்களை வைத்து ஒரு குழு அமைத்து. அந்தக்குழு சொல்வதை ஆட்சித் தலைமை செயல்படுத்த வேண்டும். இது எனது திட்டம் என்று தெரிவித்தார்.