
சென்னை: 2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 2021ல் ஆட்சி மாற்றம் எனும் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்திக் காட்ட வேண்டும். தமிழக மக்கள் தங்கள் எதிர்கால சந்ததியினருக்காக 2021ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று தெரிந்தும் நான் அரசியலில் வந்து என்ன பலன்?
இளைஞர்கள் மத்தியில் எழுச்சி அலை உருவாக வேண்டும். அப்போதுதான் அசுர பலம் கொண்ட கட்சிகள் தோற்றும். அற்புதத்தை நிகழ்த்த மக்கள் தயாராக இருக்கின்றனர்.
நான் வருங்கால முதல்வர் என்று கூறுவதை தொண்டர்கள் நிறுத்த வேண்டும். என்னுடைய கட்சி நிர்வாகள் நான் கூறியதை ஏற்று மக்களை சந்திக்க வேண்டும்.
கடந்த கால தேர்தல்களில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் 30% பேர் கட்சிக்காகவும், ஜெயலலிதாவுக்காக 70% பேரும் வாக்களித்தனர். அதுபோலவே திமுகவுக்கு வாக்களித்தவர்கள் கட்சிக்காக 30% பேரும், கருணாநிதிக்காக 70% பேரும் வாக்களித்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.