
தமிழ்நாடு அரசு சிறந்த பனைத்தொழில் கைவினைஞருக்கான விருது காயல்பட்டணம் கூட்டுறவு சங்கத்தலைவரான பூந்தோட்டம் பா.மனோகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு கதர் கிராமத்தொழில் வாரியம் சார்பில் சிறந்த கைவினைஞருக்கான விருது வழங்கும் விழா சென்னையில் வைத்து நடைபெற்றது. விழாவுக்கு தமிழக கதர் கிராமத்தொழில் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்து, மாநில அளவில் சிறந்த பனைத்தொழில் கைவினைஞருக்கான விருதினை காயல்பட்டணம், பனைவெல்லம் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் பூந்தோட்டம் பா.மனோகரனுக்கு வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு அரசு கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறையின் முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ், வாரிய தலைமை செயல் அலுவலர் கி.சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...