
நகல் எரிப்பு போராட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை ரத்து செய்யகோரி, சட்டத்தின் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது
அறந்தாங்கி அருகே கட்டுமாவடி மீமிசல் சாலையில் அம்மாபட்டிணம் உள்ளது இந்த அம்மாபட்டிணத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை ரத்து செய்ய கோரி தொடர்ந்து போராட்டம் 26 நாட்களாக நடந்து வரும் நிலையில், அந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் திரண்டு கிழக்கு கடற்கரை சாலையில் குடியுரிமை சட்ட நகல்களை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு குடியுரிமை சட்டத்தினை ரத்து செய்யகோரி கோஷமிட்டனர்.
மேலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பபெறவேண்டும்; இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றினை மத்திய அரசு தவிர்க்கவேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பி தொடர் போராட்டம் நடத்தினர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...