
கோப்புப் படம்
பெருந்துறை: பெருந்துறை அருகே கீழ்பவானி பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்ற நான்கு பேரில், இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஈரோடு பெரியவலசு நான்குமுனைச் சாலைப் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் குமாரசாமி (40), சென்னை குரோம்பேட்டை சென்ட்ரல் பேங்க் காலனி தேவராஜ் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் தரணிகுமார் (39) மற்றும் இவர்களது நண்பர்கள், ஈரோட்டைச் சேர்ந்த கலையரசு, பிரகதீஸ்வரன் ஆகியோர் வியாழக்கிழமை நள்ளிரவில் ஈரோடு- பெருந்துறை சாலையிலுள்ள வாய்க்கால்மேடு அருகே மது அருந்தி விட்டு, பின்னர் கீழ்பவானி பாசன வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர்.
நால்வரும் குளிக்கும் போது, இரண்டு பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில், குமாரசாமி உடல் இன்று மாலை மீட்கப்பட்டது. தாரணி குமார் உடலை தேடி. வருகின்றனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...