
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14, 15 ) ஆகிய இரண்டு நாள்களுக்கு வட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 14, 15) ஆகிய இரண்டு நாள்களுக்கு வட வானிலை நிலவும். தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, மதுரை தெற்கில் 102 பாரன்ஹீட் டிகிரி வெப்ப நிலை பதிவானது.
சென்னையில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் அதிகபட்சமாக 91 பாரன்ஹீட் டிகிரி வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...