
வீரமலைப்பட்டி நத்தம் இடத்தை மீட்டுத் தரக் கோரி அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் பொதுமக்கள்
ஆக்கிரமிப்பில் உள்ள வீரமலைப்பட்டி நத்தம் இடத்தை மீட்டுத் தர கோரி அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி கிரமத்தைச் சேர்ந்த வீரமலைப்பட்டியில் உள்ள நத்தம் சர்வே எண்.469/21 -ல் 1.04ச.மீ அரசுக்கு சொந்தமான இடத்தில் கிராம வளர்ச்சி பணிகளான நியாயவிலைக்கடை கட்டிடம், நூலகம், விளையாட்டு திடல் என ஊராட்சி நிர்வாகம் மூலம் உட்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்த உள்ள நிலையில் அதே பகுதியினை சேர்ந்த அர்ச்சுணன், கர்ணன், ஜெகநாதன் மனைவி மாரியம்மாள் ஆகியோர் மேற்படி இடத்தில் ஆக்கிரமிப்புகள் செய்து வளர்ச்சி பணிகளைத் தடுப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளனர்.
அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காமல் அலட்சியப்போக்குடன் இருப்பதாகவும், ஆக்கிரமிப்புகாரர்கள் தொடர்ந்து நிலத்தைக் கையகப்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுவதாகவும் கூறி வழக்கறிஞர் மார்டின் தலைமையில் இன்று காலை அப்பகுதியில் வந்த அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த பொதுமக்களிடம் சமரசம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டு பேருந்துகள் விடுவிக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...