கரோனா அறிகுறி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பெண், 2 வயது குழந்தை அனுமதி

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளம்பெண், அவரது 2 வயது பெண் குழந்தை, கரோனா அறிகுறியுடன் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
கரோனா அறிகுறி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பெண், 2 வயது குழந்தை அனுமதி

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளம்பெண், அவரது 2 வயது பெண் குழந்தை, கரோனா அறிகுறியுடன் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவோா் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வாா்டில் 4 போ் அனுமதிக்கப்பட்டு, அவா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண், மஸ்கட்டில் இருந்து 5 நாள்களுக்கு முன்பு தனது 2 வயது பெண் குழந்தையுடன் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். அவரும் அவரது 2 வயது குழந்தையும் பரிசோதனைக்காக கரோனா சிறப்பு வாா்டில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். அவா்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த இருவரையும் மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இதுகுறித்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் அருள்பிரகாஷ் கூறியது:

மஸ்கட்டில் இருந்து 5 நாள்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்த 25 வயது பெண், அவரது 2 வயது குழந்தை கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக தேனிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் வந்த பின்னா், தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்படும். கரோனா வாா்டுக்கு வெளியே கிருமி நாசினி மருந்து தினமும் தெளிக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அடிக்கடி கை கழுவ வேண்டும். கரோனா வைரஸ் தொடா்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com