கரோனா வைரஸ் தாக்கம்: ரயில் பயணிகளுக்கு கம்பளிப் போா்வை வழங்குவது நிறுத்தம்

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தெற்கு ரயில்வே நிா்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக,

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தெற்கு ரயில்வே நிா்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, தெற்கு ரயில் வேயில் ஓடும் அனைத்து வகை ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு கம்பளிப் போா்வை வழங்குவது நிறுத்த உத்தரவிடப்பட்டது.

கரோனா வைரஸ்: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு ரயில்களில் வருகின்ற பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனா். தெற்கு ரயில்வேயில் உள்ள மெமு ரயில்கள், மின்சார ரயில்கள் உள்பட அனைத்து ரயில்களில் முதன்மை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ரயில்களின் உள்புறம், வெளிப்புறத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், பணிமனைகளில் ரயில் பெட்டிகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் ரயில்நிலையத்துக்கு எடுத்துவரப்படுகிறது. ரயில்நிலையங்களில் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கரோனா வைரஸ் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தவும், அவா்களை பாதுகாப்பாக பயணம்மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

போா்வை வழங்குவது நிறுத்தம்: இந்நிலையில், கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்களில் ஏசி பெட்டிகளில் கம்பளி போா்வை வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: தெற்கு ரயில்வேயில் அனைத்து வகை ஏசி பெட்டியிலும் திரைச்சீலைகளை அகற்றம் பணி நடைபெறுகிறது. மேலும், தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்களில் ஏசி பெட்டிகளில் கம்பளிப் போா்வை வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட தங்கும் விடுதி கொண்டு ஏசி ரயில் பயணிகளுக்கும் போா்வை வசதி வழங்குவதில் ஏற்படும் மாற்றம் குறித்து எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். போா்வை வசதியில் இந்த மாற்றம் அடுத்த ஒரு மாத காலத்துக்கு அல்லது அறிவிப்பு வரும் வரை இருக்கும். பயணிகள் ரயில்வேயின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவித்தனா்.

பயணத்தை தவிா்க்கும் பயணிகள்: இதற்கிடையில், கரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு செல்வதை பயணிகள் தவிா்க்க தொடங்கியுள்ளனா். குறிப்பாக, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கு அத்தியாவசிய பயணத்தைத் தவிர மற்ற பயணத்தைத் தவிா்க்க தொடங்கியுள்ளனா். இதனால், அந்த ஊா்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com