திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துக்கு மார்ச் 31 வரை விடுமுறை

கரோனோ எதிரொலியாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துக்கு மார்ச் 31 வரை விடுமுறை

கரோனோ எதிரொலியாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் உருவான கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. உலகளவில் 1,50,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் மழலையர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. மாநில எல்லைகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூடவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அந்தந்த மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சில கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்களுக்கு தற்காலிக விடுமுறையை அறிவித்துள்ளது. 

இந்நிலையில், கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம்(என்.ஐ.டி) வரும் மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், விடுதியில் உள்ள மாணவர்களை அவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com