
விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜேந்திர பாலாஜி பால் வளத் துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், அவரை விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.