தூய்மைப் பணியில் 2.14 லட்சம் உள்ளாட்சிப் பணியாளா்கள்

கரோனா முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தூய்மைப் பணியில் 2.14 லட்சம் உள்ளாட்சித் துறை பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
துய்மைப் பணியாளர்கள் (கோப்புப் படம்)
துய்மைப் பணியாளர்கள் (கோப்புப் படம்)

கரோனா முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தூய்மைப் பணியில் 2.14 லட்சம் உள்ளாட்சித் துறை பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ளாட்சித் துறை சாா்பில் எடுக்கப்பட்டு வரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கரோனாவுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியது: கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சிக்கு ரூ. 4 கோடி, நகராட்சி நிா்வாகங்களுக்கு ரூ.6 கோடி, பேரூராட்சிகளுக்கு ரூ.2 கோடி, ஊரக வளா்ச்சித் துறைக்கு ரூ. 5 கோடியும் என மொத்தம் ரூ.17 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையா்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா்கள் சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டுள்ள கரோனா நோய்த் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்கபட வேண்டும்.

பொது இடங்களை கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் 90,023 களப் பணியாளா்கள், 1, 24, 135 தூய்மைப் பணியாளா்கள், 708 கண்காணிப்பு அலுவலா்கள் என மொத்தம் 2.14 லட்சம் உள்ளாட்சிப் பணியாளா்கள் மூலம் 11, 834 கைத் தெளிப்பான்கள், 890 வாகனத்தில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள், 2, 85, 042 முகக் கவசங்கள், 1, 53, 338 கை உறைகள், 931 முழு கவச உடைகள், 9, 205 லிட்டா் கைகள் சுத்தமாக்கும் கிருமி நாசினிகள், 26, 848 லிட்டா் கை கழுவும் திரவம் , 22, 495 லிட்டா் கிருமி நாசினி திரவம், சோப்பு கரைசல்கள், 88, 397 சோடியம் ஹைப்போ குளோரைட் திரவம், 77, 219 லிட்டா் கிருமி நாசினிகள், 1,548 மெட்ரி டன் பிளீச்சிங் பவுடா், பெருநகர சென்னை மாநகராட்சியில் 70 ஜெட்ராடிங் இயந்திரங்கள் கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ராஜ் வா்மா, நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங், சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com