சேலத்தில் ஊரடங்கு உத்தரவு

கரோனா தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ஊரடங்கு உத்தரவு

கரோனா தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலத்தில் இந்த ஊரடங்கு உத்தரவை மக்கள் எப்படிக் கடைப்பிடிக்கின்றனர் என்பதைப் பற்றிப் பார்ப்போம். 

144 தடை உத்தரவால் சேலம் ஐந்து சாலை பகுதியில் புதன்கிழமை பூட்டப்பட்டுள்ள கடைகள்.

பேருந்துகள் மற்றும் பயணிகள் இன்றி புதன்கிழமை வெறிச்சோடிய சேலம் புதிய பேருந்து நிலையம்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை தொடர்ந்து சேலம் மனக்காடு அரசு போக்குவரத்து பணிமனையில் புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு பேருந்துகள்.

144 தடை உத்தரவை மீறி சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை பகுதியில் சாலையோரமாக போடப்பட்டுள்ள காய்கறிகடைகளில் புதன்கிழமை திரண்ட பொதுமக்கள் கூட்டம்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை தொடர்ந்து புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை. இடம் குரங்குசாவடி.

144 தடை உத்தரவை தொடர்ந்து சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் காரில் புதன்கிழமை பயணித்த வாகன ஓட்டிகளிடம் 300 ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார்.

144 தடை உத்தரவை மீறி சாலையில் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளை புதன்கிழமை கைகளில் லத்தி வைத்துக்கொண்டு எச்சரித்து திருப்பி அனுப்பும் போலீஸார்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் அம்மாபேட்டை ஜெய் நகர் பகுதியில் வெளி நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களை தனிமை படுத்துவதற்காக மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் புதன்கிழமை ஒருவரின் கையில் குத்தப்பட்ட முத்திரை.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் சுரமங்கலம் பகுதியில் வெளி நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களை தனிமை படுத்துவதற்காக வீட்டின் முன்பு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் புதன்கிழமை ஒட்டப்பட்ட விழிப்புணர்வு சுவரொட்டி.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் களரம்பட்டி ஜெய்நகர் மசூதி முன்பு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டுள்ள மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com