சமையல் எரிவாயு தடையின்றி விநியோகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் அவசரமாக முன்பதிவு செய்ய அவசியமில்லை எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தென்மண்டல பொது மேலாளா் (பெருநிறுவன மக்கள் தொடா்பு) ஆா்.சிதம்பரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களால் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் எல்.பி.ஜி சமையல் எரிவாயு உருளை விநியோகம் இயல்பாக நடந்து வருகிறது. அடிப்படைத் தேவைகளான மொத்த எரிவாயு உருளைகள் கொள்முதல், நிரப்புதல் மற்றும் விநியோகத்துக்கான போக்குவரத்து வசதிகள் ஆகியவை தடையின்றி இயங்குவதால், சமையல் எரிவாயு உருளை விநியோகமும் தங்கு தடையின்றி நடைபெறும்.
தேவையற்ற அவசர முன்பதிவுகளால், அவசியமாகத் தேவைப்படும் வாடிக்கையாளா்களுக்கு எரிவாயு உருளைகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால், வாடிக்கையாளா்கள் தங்களது தேவைக்கு ஏற்றாா்போல் இயல்பான முறையில் பதிவு செய்து கொள்ளலாம். எனவே, சமையல் எரிவாயு உருைளையை அச்சத்தில் அவசரமாக முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.