கோயம்பேடு சந்தை நாளை வழக்கம் போல இயங்கும்; பொதுமக்களுக்கு அனுமதியில்லை

கோயம்பேடு சந்தை நாளையும், நாளை மறுநாளும் வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்பேடு சந்தை நாளை வழக்கம் போல இயங்கும்; பொதுமக்களுக்கு அனுமதியில்லை

கோயம்பேடு சந்தை நாளையும், நாளை மறுநாளும் வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதுமே அனைத்து போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

இதன் ஒருபகுதியாக, பாதுகாப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தை மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்தை நாளையும், நாளை மறுநாளும் வழக்கம் போல இயங்கும் என்று கோயம்பேடு அனைத்து சங்கங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் சில்லறை விற்பனைகளுக்கு அனுமதி இல்லை. சந்தையில் வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வியாபாரிகள் மட்டும் பொருள்களை வாங்கிச்சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம். பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com