
தில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தமிழகத்தின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1500 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற 1500 பேரில் 16 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 1500 பேரில் இதுவரை 981 பேரை சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளதாகவும், மீதமுள்ளவர்களைக் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. காவல் துறையினர் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து இந்த மீதமுள்ளவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 67 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை தெரிவித்தார். இந்நிலையில் தில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...