பவானியில் 10 உறவினர்களுடன் நடைபெற்ற திருமணம்!

கரோனா வைரஸ் தொற்று பரவல் தடை காரணமாக  பவானியில் மணமகன், மணமகள் உள்பட 10 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம் இன்று நடைபெற்றது.
பவானியில் 10 உறவினர்களுடன் நடைபெற்ற திருமணம்!

கரோனா வைரஸ் தொற்று பரவல் தடை காரணமாக  பவானியில் மணமகன், மணமகள் உள்பட 10 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம் இன்று நடைபெற்றது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தவிர்க்க முடியாத நிகழ்வுகள் ஆடம்பரம் இல்லாமல், எளிமையான முறையில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த சூலேஷ்வரம்பட்டியைச் சேர்ந்தவர் பாரத்ராஜ் மகன்  விவேக் கண்ணன் (26). எதனியார் நிறுவன மேலாளர். 

பவானி னழனிபுரம் 4-வது வீதியைச் சேர்ந்த  கார்த்திகேயன் மகள் நிவேதா (24). இருவரும் எம்சிஏ பட்டதாரி. இருவருக்கும், திருமணம் செய்ய கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உறவினர்களால் நிச்சயிக்கப்பட்டது. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் திருமணமும், தொடர்ந்து வரவேற்பு விருந்து தனியார் மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. பத்திரிக்கை அடித்து உறவினர்கள் அனைவருக்கும் இருதரப்பாரும் விநியோகம் செய்தனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கோயில் மூடப்பட்டதோடு, திருமணங்களும் ரத்து சொய்யப்பட்டன. இதையடுத்து நிச்சயக்கப்பட்ட திருமணத்தை நிறுத்த இரு வீட்டாருக்கும் மனமில்லை. நிச்சயக்கப்பட்ட தேதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்த மணமகனின் பெற்றோர் ஒரு காரில் நேற்று பவானிக்கு வந்தனர். 

இதைத் தொடர்ந்து, பவானியை அடுத்த சேர்வராயன்பாளையத்தில் உள்ள பாலமுருகன் கோவிலுக்கு வெளியே இவர்களின் திருமணம் நடைபெற்றது. மணமகன், மணமகள் உள்பட 10 பேர் மட்டுமே கலந்துகொண்ட இவர்களின் திருமண புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது. திருமணத்தை உறவினர்கள் பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கரோனோ தடைக்காலம் முடிந்தபின்னர் வரவேற்பு விருந்து சிறப்பாக நடத்துவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com