
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தகவலை தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 67 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 7 உயர்ந்து 74 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கும், மதுரையை சேர்ந்த 2 பேருக்கும், திருவண்ணாமலை, சென்னையில் தலா ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
தொற்று உறுதி செய்யபட்ட 7 பேரில் 4 பேர் தில்லி சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...