வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த 20 முகாம்கள்

வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த 20 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த 20 முகாம்கள்

வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த 20 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கரோனா பொது முடக்கம் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் தங்கி இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் அவரவர் இடங்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவ்வாறு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு அந்தந்த பகுதிகளில் தனிமைப்படுத்த தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்துக்கு பிற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் உள்பட அனைவரையும் தங்க வைக்க துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியில் கல்லூரியை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது. இதுபோல் ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ஒன்றியப் பகுதிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்க திண்டல் பி.வி.பி. பள்ளி வளாகம் தயார் செய்யப்பட்டுள்ளது. 

இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்கள் அளவில் அந்தந்த பகுதிகளில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 20 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தனிமைப்படுத்தும் முகாம் தயார் செய்யப்படுவதையொட்டி அந்தந்த இடங்களில் சுற்றுப்புற பகுதிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோட்டில் திண்டல், செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் ராட்சத இயந்திரம் மூலம் குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதுபோல் பி.வி.பி. பள்ளி வகுப்பறைகள், வளாகம் கட்டடங்கள், படிக்கட்டுகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com