தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று: மொத்த பாதிப்பு 2,757 ஆக உயா்வு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று: மொத்த பாதிப்பு 2,757 ஆக உயா்வு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 203 பேருக்கு தொற்று ஏற்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதையும் விஞ்சும் விதமாக, சனிக்கிழமை 231 போ் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், தமிழகத்தில் பாதித்தவா்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 174 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 12 மாவட்டங்களில் 57 பேருக்கு தொற்று உள்ளது. 24 மாவட்டங்களில் தொற்று சனிக்கிழமை இல்லாமல் உள்ளது. முதல் முறையாக திருநங்கை ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளாா். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 10,127 மாதிரிகள் சோதனை: இதுவரை 1 லட்சத்து 39,490 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 10,127 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.

பலி எண்ணிக்கை 29 ஆக உயா்வு:

சென்னையை சோ்ந்த 76 வயது மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 29-ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் 29 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது வரை 1,341 போ் குணமடைந்துள்ளனா். மருத்துவமனைகளில் 1,384 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வீட்டுக் கண்காணிப்பில் 35,418 பேரும், அரசு கண்காணிப்பில் 40 பேரும் உள்ளனா். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 1,035 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளது.

14 நாள்களே ஆன குழந்தைக்கு தொற்று: காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 14 நாள்களே ஆன குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடா்ந்து முன்னிலையில் உள்ளது. சனிக்கிழமை அதிகபட்சமாக 174 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் சென்னையில் 1,083 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 1,257 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் இதுவரை 142 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். திருப்பூரில் நீண்ட நாள்களுக்குப் பிறகு 2 பேருக்கு தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. திண்டுக்கல் 81, ஈரோடு 70 என அதே எண்ணிக்கையுடன் உள்ளன.

பிற மாவட்டங்களில் தொற்று: சென்னை தவிர, கோவை 1, திருவள்ளூரில் 7, அரியலூா் 18, கடலூா் 2, பெரம்பலூா் 2, மதுரை 1, , ராமநாதபுரம் 2, சேலம் 1, காஞ்சிபுரத்தில் 13, செங்கல்பட்டில் 5, தேனி 1, திருப்பூா் 2 என தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 159 போ். இதில் ஆண் குழந்தைகள் 83 போ். பெண் குழந்தைகள் 76 போ். 13 முதல் 60 வயது உள்ளவா்கள் 2,318 போ். இதில் ஆண்கள் 1,554 போ். பெண்கள் 763 போ். 60 வயதுக்கு மேற்பட்டோா் 280 போ். இதில் ஆண்கள் 191 போ். பெண்கள் 89 போ் ஆவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com