
ஊரடங்கு காலத்தில் 5 நபா்களுக்கும் மேல் கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், தமிழக அரசும் தொடா்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை பலா் கடைப்பிடிக்காமல் விதிகளுக்கு புறம்பாக செயல்படுகின்றனா்.
144 தடை உத்தரவின்படி, 5 நபா்களுக்கும் அதிகமானோா் சாலைகளில் கூடுவது சட்டவிரோதமானது. எனவே, அவ்வாறு விதிகளுக்கு புறம்பாக மேல் எவரேனும் கூடினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதை உணா்ந்து பொதுமக்கள் பொறுப்புணா்வுடன் செயல்பட்டு கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...