தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இணையவழியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

News image
Updated On :4 மே 2020, 7:08 am

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். கரோனா தடை உத்தரவு காரணமாக நிகழ் ஆண்டில் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கோயில் தலபுராணப்படி திருக்கம்யாண வைபவத்தை மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

Story image

சுவாமி சன்னதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி சேத்தி மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருதந்தது. கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், இணை ஆணையர் ந. நடராஜன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  திருக்கல்யாணத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சேத்தி மண்டபத்தில் எழுந்தருளினர். 

Story image

சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு விக்னேஸ்வர பூஜை,புண்யாக வாசனம், பஞ்சகவியம், பாலிகை பூஜை, காப்பு கட்டுதல், கலச பூஜை,  அக்னி காரியம் ஆகிய பூஜைகள் நடத்தப்பட்டது. தொடந்து சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல் நடைபெற்றது. அதன்பின்னர் சுவாமி மற்றும் அம்மன் பிரதியாக இருந்த சிவாச்சாரியர்க்கள்  வஸ்திரம் அணிவித்து மாலை மாற்றினர்.

Story image

மங்கள வாத்தியங்கள் முழங்க மீனாட்சி அம்மனுக்கு மங்கள நாண் அணிவிககப்பட்டது. மங்கள அரசியான மீனாட்சிக்கும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவருக்கும் மகா தீபாராதனை பூஜைகளுடன் திருக்கல்யாணம் நிறைவு பெற்றது. நிகழ் ஆண்டு திருக்கல்யாணத்து பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்தபடியே தரிசிக்கும் வகையில் திருக்கல்யாண நிகழ்வுகள் இணையவழியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Story image

கோயில் தக்கார், இணை ஆணையர் உள்பட 25 பேர் மட்டுமே பங்கேற்றனர். 4 சிவாச்சாரியார்கள் மட்டுமே திருக்கல்யாண பூஜைகளை நடத்தினர். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் திருப்பூட்டுதலின்போது பெண்கள் தங்களது திருமாங்கல்யத்துடன் இணைந்துள்ள மங்கள நாணை பெருக்கிக் கட்டிக் கொள்வது மரபு. இதன்படி வீட்டில் இருந்தபடியே பெண்கள் மங்கள நாண் பெருக்கி்கட்டிக் கொண்டனர்.

Story image

முதல்முறையாக திருவிழா இன்றி திருக்கல்யாணம் நிறைவு பெற்றுள்ளது.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.