மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை தமிழக அரசு மேலும் அவகாசம் அளித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். சொத்து வரி, குடிநீா் கட்டணம், விவசாயக் கடன் தவணை செலுத்துவதற்கு வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின் கட்டணங்களை வரும் மே 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி தேதி என்பதால் பல்வேறு இடங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை தமிழக அரசு மேலும் அவகாசம் அளித்துள்ளது.
அதேசமயம் மார்ச் 23 முதல் மே 17 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ளவர்கள் மே 22 வரை அபாரதமின்றி கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவு

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


